ஜெர்மனி அணு ஆயுதப் போரைத் தூண்டக்கூடும்!

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆயுத மேந்திய நபர்கள் ஒரு கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தி 200-க்கும் மேற் பட்டோரைக் கொல்வதற்கு முன்பு விடுக் கப்பட்ட எச்சரிக்கைகளின் பேரில், தெற்கு சூடானில் உள்ள ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினரும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வியாழக்கிழமை (12) வெளியிடப்பட்ட அந்த அறிக்கையில், சூடான் எல்லைக்கு அருகிலுள்ள தொலைதூரப் பகுதியான அபியெம்னோமில் உள்ள ஒரு கிராமத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது என்பதை UNMISS எனப்படும் ஐ.நா. பணிக்குழு அறிந்திருந்தது என்றும், ஆனால் மார்ச் 1 அன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகே அங்குள்ள தனது சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட அமைதிப்படையினரை வலுப்படுத்தியது என்றும் அந்த மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தல்கள், பலவீனமான அமைதியைச் சிதைத்துவிடும் என்று பலர் அஞ்சும் நிலையில், தெற்கு சூடான் தேர்தல்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் வேளையில் இந்தக் கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன.
“மேலும் திறம்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கத்திற்கும் UNMISS-க்கும் போதுமான தகவல்க ளும் நேரமும் இருந்தன. வலுவான நடவடிக்கை எடுக்கத் தவறியதால் உயிர்கள் பலியாகின,” என்று அம்னெஸ்டியின் கிழக்கு மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவுக்கான இயக்குநர் டைகர் சகுடா கூறினார்.
அண்டை மாவட்டமான மயோமில் இருந்து 1,000 முதல் 1,500 வரையிலான ஆயுதமேந்திய நபர்கள், குடியிருப்பாளர்களைச் சுட்டதாகவும், வீடுகளை எரித் ததாகவும், மருத்துவமனையின் ஒரு பகுதியைக் கொள் ளையடித்ததாகவும் அம்னெஸ்டி தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-க்கும் மேல் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் 130 நகரவாசிகள், 76 பாதுகாப்புப் படையினர் மற்றும் ஏழு வெளிநாட்டினர் அடங்குவர்.
230-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் எரிந்து சாம்பலா னதையும், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இரண்டு பொதுப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டதையும் செயற்கைக்கோள் படங்கள் காட்டியதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது. மாயோம் மாவட்டத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் முன்னதாகக் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட பதற்றங்களே இந்தத் தாக்குதலுக்குக் காரணமாக இருந்திருக்கலாம் என்று அம்னெஸ்டி கூறியுள்ளது.