தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வல்லுநர்களின் தேசிய சம்மேளனம் இணைந்து பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்குப் பதிலாக, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் என்ற பெயரில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலமானது நாட்டின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடியோடு பறிக்கும் மிகவும் கீழ்த்தரமான ஒரு சட்டம் என சுட்டிக்காட்டி, அதற்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் ஒன்று எதிர்வரும் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை கோட்டையில் நடைபெறவுள்ளது.
குறித்த போராட்டத்துக்கு தமது முழுமையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை (3) பொதுஜன பெரமுன கட்சியின் தொழிற்சங்க சம்மேளன உறுப்பினர்களுடன் நடைபெற்ற விசேட கலந்துரையாடலைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.


