ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலத்திற்கு எதிராக 20 மனுக்கள் தாக்கல்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுத்தல் சட்டமூலத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 20 மனுக்களின் பிரதிகள் சபாநாயகருக்குக் கிடைத்துள்ளதாக பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி தெரிவித்துள்ளார்.

இன்றைய (03) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய போதே பிரதி சபாநாயகர் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.

மேலும், அரசியலமைப்பின் 121(1) பிரிவின் கீழ் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களை தடுத்தல் சட்டமூலம் இன்னும் ஒருமாத காலத்துக்குள் நிறைவேற்றப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

அத்துடன் குறித்த சட்டமூலத்துக்கு சாதாரண மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் பாதாளக் குழுக்கள் மற்றும் போதைப்பொருளுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமாயின் இந்த சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.