மேற்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த “முரசு” (Murasu) சூறாவளியானது, நேற்றிரவு (1) 11.30 மணி அளவில் காங்கேசன்துறைக்கு வட-வடகிழக்கே சுமார் 480 கிலோமீற்றர் தொலைவில் (வடக்கு நெட்டாங்கு 13.3°N மற்றும் கிழக்கு அகலாங்கு 83.0°E) மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த சூறாவளியானது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த சில மணி நேரங்களில் தீவிர சூறாவளிப் புயலாக (Severe Cyclonic Storm) மேலும் வலுப்பெறக்கூடும்.
அதன் பிறகு, இது வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்கும் நாளை (3) அதிகாலைக்கும் இடைப்பட்ட காலத்தில் தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதியான நெல்லூருக்கும் நர்சாபூருக்கும் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளது.
10N-17N மற்றும் 80E-90E ஆகிய எல்லைக்குட்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்கு மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்களும் கடற்படையினரும் செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.



