பிரெக்சிட் தீர்மானம் நிறைவேற்றம் – ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகின்றது பிரித்தானியா

நேற்று (20) பிரித்தானியா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியா அரசின் தீர்மானம் 124 அதிகமான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் மூலம் எதிர்வரும் ஜனவரி 31 ஆம் நாள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் பிரித்தானியாவின் தீர்மானத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர்.

ஆதவராக 359 வாக்குகளும், எதிராக 234 வாக்குகளும் கிடைத்துள்ளன. தற்போது ஒப்பந்தம் நாடாளுமன்றத்திலும், பிரபுக்கள் சபையிலும் ஆய்வு செய்யப்படுகின்றது. எமது நாட்டை நாம் மீண்டும் ஒன்றிணைக்கும் தருணம் வந்துள்ளதாக பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜனவரி 31 ஆம் நாள் பிரித்தானியா வெளியேறுவதற்கான கால எல்லை என்பது சட்டமாகக் கொண்டுவரப்படவுள்ளது.