மெக்கா ஒப்பந்தத்தின்படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்குகளை குறிவைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் நேற்று தாக்குதல் நடத்தியதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
சவுதி அரேபியாவுடன் புதிதாக செயல்பாட்டுக்கு வந்துள்ள மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், ஏமனில் செயல்படும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களின் இலக்குகள் மீது பாகிஸ்தான் விமானப் படை வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
மேலும், சவுதி அரேபியாவில் சுமார் 8,000 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கு பிராந்திய மோதலில் தற்போது பாகிஸ்தானும் நேரடியாக களமிறங்கியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, சவுதி அரேபியாவுக்கு வழங்கப்படும் ராணுவ ஆதரவை இஸ்லாமாபாத் தீவிரப்படுத்தியுள்ளது என பாகிஸ்தான் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஹவுதி கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களில் பாகிஸ்தான் போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.


