இலங்கையின் ஆளும் தரப்பான மக்கள் விடுதலை முன்னணிக்கும் (ஜே.வி.பி.) இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதீய ஜனாதாக்கட்சிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நேற்று நடை பெற்றுள்ளது.
இந்த சந்திப்பில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்புதல், இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுடனான தொடர்பு, இந்திய, இலங்கை மீனவர்கள் இடையில் தொடரும் பிரச்சினைகள் மற்றும் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் காணப்படுகின்ற இந்துக்கோவில்கள் ஆக்கிரமிக்கப்படுதல் உள்ளட்ட விடயங்கள் தொடர்பிலும் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இருநாட்டு அரசாங்க மட்டத்தில் அவ்விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் முன்னெடுப்பது தொடர்பிலும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.



