அனோஜன் விவகாரம்: இம்ரான் மஹ்ரூப் கோரிக்கை

சவூதி அரேபியாவில் பணியாற்றி வந்த அணோஜன் சிவராசாவுக்கு அந்த நாட்டில் மரண தண்டனை வழங்கப்பட்ட விவகாரத்தில் ஜனாதிபதி அவர்கள் சவூதி அரேபிய மன்னருக்கு நேரடி இராஜதந்திர முறையீட்டை விடுக்க வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞன் தனது தவறை உணர்ந்து உடனடியாகப் பதிவை நீக்கி பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளதையும், அவரது இள வயது மற்றும் குடும்பச் சூழலையும் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் அவருக்குக் மன்னிப்பு வழங்கி தாய்நாடு திரும்ப வழிவகை செய்யுமாறு இலங்கை அரசாங்கம் தனது உச்சகட்ட இராஜதந்திர முயற்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப்  கோரிக்கை விடுத்துள்ளார்.

புனித நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது எந்தவொரு மதத்தின் நம்பிக்கைகளைப் புண்படுத்தும் வகையிலோ வெளியிடப்படும் கருத்துகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியிலும், மத விழுமியங்களை மதிப்பவன் என்ற ரீதியிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்து வெளியிடப்பட்ட தவறான மற்றும் அவதூறான கருத்துகளை நான் முற்றாக நிராகரிப்பதுடன், அதனை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று திங்கட்கிழமை (21) அவர் விடுத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.