யாழ்ப்பாணம் – மானிப்பாய் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞனை காவல்துறையினர் வழிமறித்தபோது, அதில் பயணித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம், சபாபதிப்பிள்ளை வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த இளைஞன் யாழ்ப்பாணம் -காரைநகர் வீதியில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது போக்குவரத்துப் காவல்துறையினர் அவரை வழிமறித்தனர்.
இதன்போது, அந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திய பின்னர் தானாகவே கீழே சரிந்து விழுந்து அசைவற்று காணப்பட்டுள்ளார்.
அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.



