மேற்கத்திய சக்திகள், தங்கள் சொந்த நாட்டு மக்களை அதன் நீதியிலிருந்து பாதுகாக்கும் அதே வேளையில், முன்னாள் காலனி நாடுக ளைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க சர்வ தேச குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) பயன் படுத்தியுள்ளன என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டேவின்பு தன் கிழமை(16) தெரிவித்தார்.
போதைப்பொருள் மீதான தனது போரின்போது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, ICC-யின் பிடியாணையின் பேரில் மார்ச் 2025-ல் கைது செய்யப்பட்டு ஹேக்கிற்கு மாற்றப்பட்ட பிறகு, டுடெர்டே முதன்முறையாகப் பொதுவெளியில் தோன்றியதைத் தொடர்ந்து அவரது இந்தக் கருத்துக்கள் வெளிவந்தன.
“டுடெர்டே மீது குற்றம் சாட்டப்பட்ட நேரத்தில், ஆப்பிரிக்க நாட்டினர் மட்டுமே நீதி மன்றத்தால் விசாரிக்கப்பட்டிருந்தனர்,” என்று ரோக் கூறினார். குறிப்பாக ஆப்பிரிக்க ஒன்றியத்தின் உறுப்பினர்களிடமிருந்து வரும் பாரபட்சமான நீதி குறித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவே ICC முயன்றதாக அவர் வாதிட்டார்.
இருப்பினும், அமெரிக்கா அல்லது ஐரோப்பாவின் பதவியில் இருக்கும் அல்லது முன்னாள் அதிபர் எவரும் இதுவரை நீதிமன்றத்தால் குற்றம் சாட்டப்படவில்லை. “இது, பிலிப்பைன்ஸ் போன்ற முன்னாள் காலனி நாடுகளில், புதிதாக சுதந்திரம் பெற்ற நாடுகளின் மீது முன்னாள் காலனித்துவ சக்திகள் தொடர்ந்து செல்வாக்கு செலுத்துவதற்கான ஒரு கருவியாக ICC செயல்படுகிறது என்ற எண்ணத்தைத் தூண்டியுள்ளது,”
“சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பின் னணியில் உள்ள சக்திகள், தங்களின் முன்னாள் காலனி நாடுகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என விரும்புகின்றன, ஆனால் தங்கள் நாட்டு மக்கள் நீதிக்கு உட்படுத்தப்படுவதை அவை விரும்புவதில்லை,” என்று ரோக் கூறினார். ரஷ்யா, சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகியவை நீதிமன்றத்தை நிறுவிய ஒப்பந்தமான ரோம் சட்டத்தில் உறுப்பினர்களாக இல்லை.



