மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள இலங்கை தமிழர் ஒருவர் தனித்துணை ஆட்சியரிடம் மருத்துவ விடுப்பு கேட்க சென்ற போது அவரை காலணியால் தாக்க முயன்றதை கண்டித்து 9ம் திகதி வியாழன் மாலை இலங்கை தமிழர்கள் தனித்துணை ஆட்சியர் அலுவலகத்தை ஐந்து மணி நேரத்துக்கு மேலாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ வழியின்றி இலங்கைத் தமிழர்கள் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு வந்திறங்கிய இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.இலங்கை தமிழர்களை கண்காணிப்பதற்காக மண்டபத்தில் தனித்துணை ஆட்சியர் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இலங்கை தமிழர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் தங்கி உள்ள தங்கள் உறவினர்கள் வீட்டுக்கு செல்வதற்கும், மருத்துவம் சிகிச்சை மற்றும் கல்வி பயில வெளியூர் சென்றாலும் தனித்து தனித்துணை ஆட்சியரிடம் விடுப்பு பெற்று செல்ல வேண்டும்.
இந்நிலையில் உள்நாட்டு போர் காரணமாக இலங்கையில் இருந்து அகதியாக தனுஷ்கோடி வந்திறங்கி 2007 ஆம் ஆண்டு முதல் மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஜெகன் (50) என்பவர் மருத்துவ சிகிச்சைக்காகவும், உடல் நலம் சரியில்லாததால் மருத்துவ உதவிக்காக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து மனு அளிப்பதற்காக சென்னை செல்ல மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தனித்துணை ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.



