எதிர்க்கட்சித் தலைவர் சஜித் – இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஸ்ரீ ராஜ்நாத் சிங் அவர்களுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (09) புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் பன்முகத் தொடர்புகள் போலவே இரு தரப்பினரின் பரஸ்பர நலனுக்காக இருதரப்பு ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.