கொழும்பு துறைமுகத்தில் போதை பொருள் மீட்பு

கொழும்பு துறைமுகத்திலிருந்து மீட்கப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து 463 கிலோகிராம்களுக்கும் அதிகமான ‘ஐஸ்’ எனப்படும் கிரிஸ்டல் மெத்தபெட்டமின் (crystal methamphetamine) போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

குறித்த கொள்கலனிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களை அளவிடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கொள்கலன் பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பை சேர்ந்த 44 வயதான சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த போதைப்பொருள் தொகைக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.