பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும் வாகனங்களை தரிக்கவும் அனுமதி!

செல்வ சந்நிதி ஆலய தேர் மற்றும் தீர்த்த உற்சவங்களை முன்னிட்டு, பலாலி வீதியில் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களைத் தரித்து நிறுத்தவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.

இராணுவ உயர் பாதுகாப்பு வலயத்தினூடாக செல்லும் பலாலி வீதியில் கடந்த வருடம் மக்கள் நடந்து செல்லவும், வாகனங்களை நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்ததுடன், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே வீதி திறந்து விடப்பட்டது.

இந்நிலையில், செல்வ சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா  இன்று (27) நாளையும் (28) நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு, ஆலயத்தை நோக்கிச் செல்லும் காவடி மற்றும் பாதயாத்திரை பக்தர்கள் பலாலி வீதியூடாக காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்து செல்லவும், வீதியில் தரித்து நிற்கவும் இராணுவத்தினர் அனுமதி வழங்கியுள்ளனர்.