முன்மொழியப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று சட்டத்தரணிகள் சங்கம், தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளுக்கு இடையில் இன்று கொழும்பில் அமைந்துள்ள சட்டத்தரணிகள் சங்க காரியத்தில் நடைபெற்றது.
தொழிலாளர் போராட்ட மத்திய நிலையம் , முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சம உரிமை இயக்கம் உள்ளிட்ட வெகுஜன அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் இச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.



