இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள், போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்துங்கள் – வடக்கு கடற்படை தளபதியிடம் ஆளுநர் வலியுறுத்தல்

இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி முறைகளால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த கடற்படையினரின் நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வட மாகாண கடற்படைத் தளபதியிடம் கோரியுள்ளார்.

வட மாகாண கடற்படைத் தளபதியாக புதிதாக பொறுப்பேற்றுள்ள, ரியர் அட்மிரல் எம்.டி.கே.விஜேவர்த்தன, நேற்றைய தினம் புதன்கிழமை (12) ஆளுநர் செயலகத்தில் ஆளுநர் வேதநாயகனை மரியாதை நிமித்தம் சந்தித்து கலந்துரையாடியபோதே ஆளுநர் இந்த விடயங்களை வலியுறுத்தினார்.