செம்மணி மனித புதைகுழிக்கு அருகில் எழுமாற்றாக அகழப்பட்ட சோதனை குழிக்களுக்குள் இருந்து தலையில்லா முண்டமான என்புக்கூடு ஒன்று உள்ளிட்ட 04 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் 102 ஆவது நாள் அகழ்வு பணிகள் நேற்று (10) முன்னெடுக்கப்பட்டன.
இதன்போதே குறித்த என்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, முதலாம் , இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத்தில் இன்றுடன் (11) 103 நாட்கள் முன்னெடுக்கப்பட்ட அகழ்வு பணியில் 539 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், 524 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில், 49ஆவது நாளான இன்றைய தினம் (11) ஐந்து சிறுவர்களுடைய என்புகூடுகள் உட்பட 15 என்புகூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 11 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன் மாட்டின் காலில் அடிக்கப்பட்டும் லாடம் ஒன்றும், கை வளையல் ஒன்றும் நேற்றைய தினம் (10) சான்று பொருட்களாக மீட்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் (11) என்புகூடொன்றின் இடுப்பு பகுதியில் தாயத்து ஒன்றும் ஒரு ரூபாய் நாணய குற்றி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.
இதன்படி குறித்த பகுதியில் எழுமாறாக தோண்டப்பட்ட சோதனைக்குழிகள் இரண்டில் இருந்து என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டு, அகழ்ந்து எடுக்கப்படுகின்றன.



