மெக்காவில் முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து

சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

துருக்கி அதிபர், சவூதி பட்டத்து இளவரசர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஆகியோர் மெக்காவில் நடைபெற்ற சந்திப்பின்போது இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தத்தின்படி, மூன்று நாடுகளில் ஏதேனும் ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் ஆயுதத் தாக்குதல், மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.

இதேவேளை, பிராந்தியத்தில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன், ஈரான் போரைத் தொடங்குவதையோ அல்லது பிராந்தியத்தில் மோதலை விரிவுபடுத்துவதையோ விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், ஈரான் எந்தவொரு “வற்புறுத்தலுக்கும்” அடிபணியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.