மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி விசேட பாதுகாப்பு நடவடிக்கை!

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்நிலையில்,   மட்டக்களப்பு சிறைச்சாலையை சுற்றி இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர்  காவல்துறையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று (07) வெள்ளிக்கிழமை ஈடுபட்டுவருவதுடன், இராணுவ மோட்டர் சைக்கிள் பிரிவு  சிறைச்சாலை பகுதியை சுற்று ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.