எதிர்க்கட்சித் தலைவர் இன்றைய தினமே விடுவிக்கப்பட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழ் நாடு:  தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு இடங்களிலும் சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் இருந்து தாக்கல் செய்யப்பட்ட முன்  பிணை மனு மீதான விசாரணையில் தஞ்சை காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இன்றைய தினமே விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட வேண்டும். விசாரணையை நாளை வரை கொண்டு செல்லக் கூடாது. அதேபோல், விசாரணைக்கு உதயநிதி ஸ்டாலின் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.