ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உதவிச் செயலாளரும், ஐ.நா. அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) ஆசிய–பசிபிக் பிராந்தியப் பணிப்பாளருமான கன்னி விக்னராஜாவிற்கும் (Kanniwiknaraja) இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான உயர் மட்டச் சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
தற்போதைய ஐ.நா. அமைப்பில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் இலங்கையரான கன்னி விக்னராஜாவுடனான இச்சந்திப்பு மிகச் சுமூகமான முறையில் அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பிற்குமிடையிலான அபிவிருத்தி ஒத்துழைப்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக இச்சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
குறிப்பாக, அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்ற வேலைத்திட்டம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மேம்பாடு, இலங்கை மனிதவளத்தின் திறன் மற்றும் ஆற்றல் வளர்ச்சி என்பன குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டது.



