இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!

IMG 20260801 WA0110 இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!
திருகோணமலை மாவட்ட, திருகோணமலை வலயக்கல்வி பிரிவுக்குட்பட்ட தம்பலகாமம் தி/ஆதிகோணேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இடிந்து விழும் நிலையில் வகுப்பறை கட்டடம் காணப்படுவதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதன் மூலம் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். இக் கட்டடத்தின் ஒரு பகுதி ஏற்கனவே குடைசாய்ந்து காணப்படுகிறது.
IMG 20260801 WA0112 இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!
இவ்வாறான நிலையில் இது குறித்து உரிய கல்வித்துறை சார் உயரதிகாரிகளுக்கு அறிவித்தும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இக் கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் பெரும் அச்சத்துடனேயே அருகாமையில் உள்ள மாணவர்களும் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த பாடசாலையில் பல நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருவதுடன் தரம் 1 தொடக்கம் உயர்தரம் வரை இங்கு காணப்படுகிறது.
IMG 20260801 WA0113 இடிந்து விழும் நிலையில் பாடசாலை கட்டடங்கள்!
எனவே கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து பாடசாலை மாணவர்களின் நலனை கொண்டு குறித்த கட்ட திருத்தியமைத்தாவது தருமாறும் உரிய தரப்புக்களுக்கு பெற்றார்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.