மாகாண சபை தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டமை தொடர்பில் தகவல்

2025 மாகாண சபை தேர்தல்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த 9,000 மில்லியன் ரூபாய் நிதி தேசிய வரவு செலவுத்திட்ட திணைக்களத்திற்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படாததன் காரணமாக குறித்த நிதி இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வருடாந்த செயல்திறன் அறிக்கையின் ஊடாக இந்த விடயம் தெரியவந்துள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான செலவின மதிப்பீட்டின்படி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு மொத்தமாக 21,487 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருந்ததுடன், அதில் உள்ளூராட்சிமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்களுக்காக மாத்திரம் 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு 12,487 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது, அதில் 12,278 மில்லியன் ரூபாய் தொடர் செலவினத்திற்காகவும், 209 மில்லியன் ரூபாய் மூலதனச் செலவினத்திற்காகவும் ஒதுக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது.