பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள 2027ம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம்

2027 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

நிதி அமைச்சின் தகவல்களின்படி, ஒவ்வொரு அமைச்சிற்குமான செலவின மதிப்பீடுகளைக் கோடிட்டுக் காட்டும் நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் வரைவு, செப்டெம்பர் 14ஆம் திகதி அன்று ஒப்புதலுக்காக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் ஒப்புதலைத் தொடர்ந்து, இந்த சட்டமூலம் செப்டெம்பர் 18ஆம் திகதி வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது.

பின்னர், ஒக்டோபர் 7ஆம் திகதி அதன் மீதான முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

மேலும், இரண்டாம் வாசிப்பு விவாதம் நவம்பர் 13ஆம் திகதி முதல் நவம்பர் 20ஆம் திகதி வரையிலும், குழு நிலை விவாதம் நவம்பர் 21ஆம் திகதி முதல் டிசம்பர் 14ஆம் திகதி வரையிலும் நடைபெறும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.