கடுமையான வெப்ப அலை மீண்டும் உருவாகி வருவதால் ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக ஐரோப்பிய கண்டம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடுமையான வெப்ப அலை வீசி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஐரோப்பாவுக்கான உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) பிராந்திய இயக்குநர் ஹன்ஸ் க்ளூஜ், 41 நாடுகளின் பிரதிநிதிகளுடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார். சமீபத்திய வெப்ப அலைகளில் இருந்து பெற்ற படிப்பினை மற்றும் எதிர்கால தயாரிப்புகள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது.
இதையடுத்து, ஹன்ஸ் க்ளூஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அட்லாண்டிக் பெருங்கடலில் மற்றொரு கடுமையான வெப்ப அலை உருவாகி வருவதால், ஐரோப்பாவுக்கு இன்னும் அதிக கொடிய வாரங்கள் காத்திருக்கின்றன. போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயினில் வெப்பநிலை வரும் நாட்களில் 43 டிகிரி செல்சியஸ் (109 டிகிரி பாரன்ஹீட்) வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



