பசிபிக் பெருங்கடலில் சீனா ஏவுகணை சோதனை நடத்தியதைத் தொடர்ந்து, பிராந்திய நாடுகளில் கவலை அதிகரித்துள்ளது.
சீன இராணுவம், அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து திங்கள்கிழமை பசிபிக் பெருங்கடலை நோக்கி ஏவுகணை ஒன்றை சோதனை செய்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்ரேலியா, நியூசிலாந்து மற்றும் தைவான் ஆகிய நாடுகள் கவலையும் விமர்சனங்களையும் வெளிப்படுத்தியுள்ளன.



