கல்லோயா படுகொலையின் 70 ஆண்டு நினைவேந்தல் நிகழ்வானது வியாழக்கிழமை (11) மட்டக்களப்பு அமெரிக்கன் மிஷன் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பா ட்டாளர்கள் ஒன்றியத்தின் தலைவர் ச.சிவயோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வினை தொடங்கி வைத்து அவர் உரையாற்றுகையில், தமிழ் மக்கள் மீதான கட்டமைக்கப்பட் ட இன அழிப்பானது 70 ஆண்டுகளுக்கு முன்னரே இனவாத ஆட்சியாளர்கள் தொடங்கி விட்டார்கள்.
இதுவே தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட முதலாவது இனப்படு கொலையாகும். இக் கொலச் சம்பவங்கள் தொடர்ச்சியாக 5 நாட்கள் வரை நீடித்த நிலையில் 150 மேற்பட் டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
இச் சம்பவங்கள் அனைத்தும் திட்டமிட ப்பட்ட வகையில் அப்போதைய ஆட்சியா ளர்களால் நடத்தப்பட்டவையாகும்.
அதனுடைய தொடர்ச்சி யாக தமிழ் மக்களது நிலம்,வளம்,பண்பாடு,கலை,காலாச்சாரமென அனைத்தும் சட்டங்கள் மூலமாக இன்றளவும் கபலிகரம் செய்யப்பட்டு வருகின்றது.
சட்டத்துக்கு புறம்பாக காடையர்களை வைத்து செய்யப் பட்ட சட்டத்துக்குப் புறம்பான சுத்திகரிக்கப்பட்ட இன அழிப்பானது சட்ட பூர்வமான அங்கிகாரங்களுடன் இந்த இனவாத ஆட்சியாளர்கள் மூலம் இன்றளவும் தொடர்ந்து செயற்படுத்தப்பட்டு வருகினறது என்பதுதான் உண்மை இதனை நாங்கள் இனவாதத்தின் பரினாம வளர்ச்சியாக பார்க்கின்றோம் என கூறினார்.
நிகழ்வில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந் திரன், முன்னால் மாநகரசபை மேஜர் சரவணபவன், மட்டக்களப்பு மாவட்ட வலிந்து கானாமலாக் கப்பட்டோர் சங்க தலைவி அமலநாயகி, மட்டக்களப்பு மாவட்ட கால் நடை கூட்டுறவு சம்மேளத்தின் தலைவர் நேமீஸ்வரன், அமெரிக்கன் மிஷனைச் சேர்ந்த அருட்பணி ரூபன்அடிகளார், ஓய்வுபெற்ற அதிபர் தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டு தமது கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மேலும் இந்நிகழ்வில் சிவில் சமூக பிரதிநிதிகள், சமயத் தலைவர்கள், பண்ணையாளர்கள்,பொதுமக்கலென பலதரப்பட்டோரும் கலந்து கொண்டனர்.



