மத்திய கிழக்கு மோதலால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா கடன் உத்தரவாதத் திட்டத்தை கடந்த புதன்கிழமை(6) அறிமுகப் படுத்தியுள்ளது.
மத்திய அரசு, 2 பில்லியன் டாலர் மூல தன ஒதுக்கீட்டுத் திட்டமான அவசரகால கடன் உத்தரவாதத் திட்டம் (ECLGS) 5.0-ஐ செவ்வாய்க் கிழமை அறிவித்தது. கோவிட்-19 பெருந்தொற் றால் பாதிக்கப்பட்ட வணிகங்களுக்கு ஆதரவளிப் பதற்காக, ECLGS வசதி முதன்முதலில் மே 2020-இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டம் கூடுதலாக 3.5 பில்லியன் டாலர் கடன் ஓட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பயணிகள் விமான நிறுவனங்களுக்கான கடன் வரம்பு 160 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“மேற்கு ஆசிய மோதலால் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) மற்றும் விமானத் துறைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைச் சமாளிக்க இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது,” என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன் களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை இந்தத் திட்டம் பொருந்தும். அதிகரித்த ஜெட் எரிபொருள் விலை மற்றும் நெருக்கடியைச் சந்திக்கும் விமானத் துறைக்கான கடன்கள், இரண்டு வருட தற்காலிகத் தடையுடன் சேர்த்து, ஏழு வருட காலத்திற்கு வழங்கப்படும். வணிகங்களுக்கான கடன்கள், ஒரு வருட தற்காலிகத் தடையுடன் சேர்த்து, ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படும்.
மத்திய கிழக்கு மோதலால் தூண்டப்பட்ட நெருக் கடிக்கு மத்தியில் வேலைகளைப் பாதுகாப்பதுடன், செயல்பாடுகளையும் விநியோகச் சங்கிலிகளையும் பராமரிக்க உதவுவதே இதன் நோக்கமாகும்.
பிப்ரவரி 28 முதல் ஏப்ரல் 24 வரை இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 15,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.



