பெய்ஜிங்கில் தனது ஈரானிய சகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியபோது, ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கையை “சட்டவிரோதமானது” என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய கிழக்கு ஒரு “முடிவான திருப்புமுனையில்” இருப்பதாகவும், முழுமையான போர் நிறுத்தம் அவசியம் என்றும் கூறினார். ஈரானின் வெளியுறவு அமைச்சர் அராக்சி, பெய்ஜிங்கின் “உறுதியான நிலைப்பாட்டிற்கு” நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளும் முன்னெப்போதையும் விட நெருக்கமாக வளரும் என்றும் கூறினார்.
ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, பெய்ஜிங்கில் சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீயை சந்தித்தார். அமெரிக்காவுடனான உறவில் விரிசல் ஏற்பட்ட பிறகு அவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். மேலும், ட்றம்பின் திட்டமிடப்பட்ட பயணத்திற்கு ஒரு வாரத்திற்கு சற்று முன்னதாகவே இந்தப் பயணம் நடைபெற்றுள்ளது.
அதேசமயம், அமெரிக்கத் தடைகள் இருந்த போதிலும், ஈரான் மற்றும் ரஷ்யாவின் ட்ரோன் திட்டங்களுக்கு சீனா தொடர்ந்து உதிரிபாகங்களை வழங்கி வருகிறதுஎனவால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. சீன நிறுவனங்கள், ட்ரோன்களுக்கான என்ஜின்கள், பேட்டரிகள், ஃபைபர் ஆப்டிக் கேபிள்கள் மற்றும் மைக்ரோசிப்கள் உள்ளிட்ட இரட்டைப் பயன்பாட்டு உதிரி பாகங்களை, பெரும்பாலும் அமெரிக்கத் தடைகளை மீறி, ஈரான் மற்றும் ரஷ்யாவிற்கு வெளிப்படையாக ஏற்றுமதி செய்கின்றன.
சியாமென் விக்டரி டெக்னாலஜி என்ற ஒரு நிறுவனம், சமீபத்திய பிராந்தியப் போர்களில் பயன்படுத் தப்பட்ட ஈரானிய ஷாஹெட்-136 தாக்குதல் ட்ரோன்களுடன் தொடர்புடைய, ஜெர்மன் வடிவமைப்பிலான L550 ட்ரோன் களுக்கான இயந்திரங்களை விளம்பரப்படுத்தியது. ட்ரோன்கள், உலகளாவிய விநியோகச் சங்கிலிகள் மூலம் எளிதாகக் கொண்டு செல்லப்படும் சாதாரண வணிகப் பாகங்களைச் சார்ந்து இருப்பதால், இந்த வர்த்தகத்தை நிறுத்துவது கடினம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.



