தமிழகத் தேர்தலில் வெற்றி பெற்ற விஜய்க்கு நாமல் வாழ்த்து

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், பிரபல நடிகருமான விஜய்க்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

நாமல் ராஜபக்ஷ உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நடிகரும் அரசியல் தலைவருமான ஜோசப் விஜய் சந்திரசேகருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களுக்கான உண்மையான மக்கள் பணி இப்போதுதான் ஆரம்பிக்கிறது.

வரவிருக்கும் சவால்களை எதிர்கொண்டு, மக்களுக்குத் தேவையான பயனுள்ள திட்டங்களைச் கொண்டு சேர்க்க உங்களுக்கும், உங்களது குழுவினருக்கும் மனவலிமையும் துணிச்சலும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

மேலும், இரு நாட்டு மக்களையும் பாதிக்கும் பல்வேறு முக்கிய விவகாரங்களில், இலங்கையுடன் வலுவான மற்றும் ஆக்கப்பூர்வமான உறவை வளர்த்தெடுக்க புதிய தலைமை வழிவகுக்கும் என நம்புவதாகவும் நாமல் ராஜபகஷ குறிப்பிட்டுள்ளார்.