OPEC-OPEC Plus ஆகியவற்றில் இருந்து விலகுவதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவிப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸ், முக்கிய எண்ணெய் உற்பத்தி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் (OPEC) மற்றும் ஒபெக் பிளஸ் (OPEC Plus) ஆகிய அமைப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் வரலாற்று ரீதியாக ஒரு பெரிய எரிசக்தி நெருக்கடியை உருவாக்கி, உலகப் பொருளாதாரத்தை உலுக்கியுள்ள ஈரான் போர்ச்சூழலில், கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்த முடிவை எடுத்துள்ளது.

இந்த முடிவு தனது “நீண்ட கால உத்தி, பொருளாதார தொலைநோக்கு பார்வை மற்றும் மாறிவரும் எரிசக்திப் போக்கு” ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டமைப்புகளின் கீழ் உள்ள எந்தவொரு கடமைகளிலிருந்தும் விடுபடுவது நாட்டுக்கு கூடுதல் நெகிழ்வுத்தன்மையை அளிக்கும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எரிசக்தி அமைச்சர் சுஹைல் அல் மஸ்ரூய் கூறியுள்ளார்.