பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை – இஸ்ரேல் சட்டத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு கண்டனம்

பாலஸ்தீன கைதிகளுக்கு மரண தண்டனை வழங்குவதை அனுமதிக்கும் இஸ்ரேலின் புதிய சட்டத்திற்கு இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பு (ஓஐசி) கண்டனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசஸ்ட் நிறைவேற்றியுள்ள புதிய சட்டத்தின்படி, ”தீவிரவாத தாக்குதல்களில் தண்டிக்கப்படும் பாலத்தீனர்களுக்கு 90 நாட்களில் மரண தண்டனை நிறைவேற்றப்படும்.”

இஸ்லாமிய நாடுகளின் அமைப்பான ஓஐசி எக்ஸ் தளப் பதிவில் இந்தச் சட்டத்தைக் விமர்சித்துள்ளது.

“இந்தச் சட்டத்துக்கு இஸ்ரேல் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியதை ஓஐசி அமைப்பு வன்மையாகக் கண்டிக்கிறது. ஓஐசி இதனை ஆபத்தான மற்றும் எதிர்பார்த்திராத நகர்வாக கருதுகிறது. இது பாலத்தீன சிறைவாசிகள் கொல்லப்படுவதையும் அரசியல் மரண தண்டனையையும் சட்டப்பூர்வமாக்குவதற்கு நிகரானது.” என ஓஐசி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.