”நமக்கு மிக அருகிலேயே ஒரு பெரும் போர் நடைபெற்று வருகிறது. இப்போர் உலகம் முழுவதையும் ஒரு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு நாடாக, நாம் இந்தச் சூழலை எப்படிக் கையாளுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது,” என்றார் பிரதமர் நரேந்திர மோடி.
இந்திய தலை நகர் டெல்லியில் நடைபெற்ற ஒரு உச்சிமாநாட்டில், நாட்டில் நிலவும் எல்.பி.ஜி (LPG) எரிவாயு சூழல் மற்றும் ஈரான் போர் ஆகியவை குறித்த தனது கருத்துக்களைப் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.
இந்த நிலையில், ‘இக்காலகட்டத்தில் சமையல் எரிவாயு குறித்துப் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. சிலர் தேவையற்ற பீதியை உருவாக்க முயன்று வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த அரசியல் நோக்கங்களை முன்னெடுக்கவே இவ்வாறு செய்கின்றனர், இன்று ஏற்பட்டுள்ள இந்த உலகளாவிய நெருக்கடியின் தாக்கத்திலிருந்து எந்தவொரு நாடும் தப்பவில்லை. அனைவரும், ஏதோ ஒரு வகையில்—அதிகமாகவோ அல்லது குறைவாகவோ—இந்நெருக்கடிக்குப் பலியாகியுள்ளனர். இந்நெருக்கடியைச் சமாளிப்பதற்காக இந்தியா தனது அனைத்து முயற்சிகளையும் முழுமையாக மேற்கொண்டு வருகிறது,” என்றார்.



