மலையகத்தில் எமது பரம்பரைகளை உருவாக்கிய மலையக பெருந்தோட்ட மக்கள் அனைவருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக காணி உரிமை வழங்கப்பட வேண்டுமென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
கொட்டக்கலையில் சனிக்கிழமை (07) இடம் பெற்ற மலையக வாழ்வுரிமை மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.



