ஈரான்மீதான தாக்குதலில் 1,332 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்

ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் தற்போது வரை 1,332 பேர் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான ஈரானின் நிரந்தர தூதர் அமிர் சயீத் இர்வானி தெரிவித்துள்ளார்.

ஈரானிய செம்பிறை சங்கத்தின்படி, உயிரிழந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர் என நியூயார்க்கில் செய்தியாளர்களைச் சந்தித்த இர்வானி கூறினார்.

“ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர், இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது,” என்றும் அவர் தெரிவித்தார்.

பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் இதர பொது உள்கட்டமைப்புகள் “வேண்டுமென்றே” இலக்கு வைக்கப்படுவதாக இர்வானி குற்றம் சாட்டினார்.

பொது உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்த குற்றச்சாட்டை அமெரிக்கா மறுத்துள்ளது. ஈரானில், சிறுமிகள் உட்பட 150 பேர் இறந்த பள்ளிகள் மீதான தாக்குதலை விசாரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. அதே நேரத்தில் ஈரான் தனது பொதுமக்களை இலக்கு வைப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.