ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்- ஏர் இந்தியா புதிய அறிவிப்பு

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, ஏர் இந்தியா நிறுவனம் ஒரு பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

ஏர் இந்தியா தனது பதிவில், “மத்திய கிழக்கின் சில பகுதிகளில் நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இடங்களுக்கான ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்கள் பயணிகள் மற்றும் பணியாளர்களுக்கு மிக உயர்ந்த பாதுகாப்பு தரத்தை உறுதி செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளது.

பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்க தங்கள் குழுக்கள் தயாராக இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

“உங்கள் விமானத்தின் சமீபத்திய நிலையை அறிய, https://airindia.com/in/en/manage/flight-status.html என்ற இணையதளத்தில் சென்று சரிபார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். மேலும் தகவல்களுக்கு, எங்கள் 24×7 அழைப்பு மையத்தை +91 1169329333, +91 1169329999 என்ற எண்களில் தொடர்புகொள்ளவும்.”

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதை “பெரிய இராணுவ நடவடிக்கை” என்று விவரித்து, ஈரான் அரசுப் படைகளிடம் ஆயுதங்களை கைவிடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர்,  ஈரானுக்கு எதிராக முன்னெச்சரிக்கை தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியதாக தெரிவித்துள்ளார்.

இரானின் பல பகுதிகளில் குண்டுவெடிப்பு சத்தங்கள் கேட்கப்பட்டன.