நிதி குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜராக மைத்திரி விக்கிரமசிங்க மறுப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்கிரமசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இன்று வெள்ளிக்கிழமை (20) ஆஜராகமுடியாது என தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சம்பந்தப்பட்ட விசாரணை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக, நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் ஆஜராகாமைக்கான காரணங்கள் எதுவும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை எனவும், உடல்நலக் காரணங்களால் அவர் ஆஜராகமுடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.