பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு குறித்து அர்ச்சுனா எழுப்பிய கேள்வி சர்ச்சை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஆசனங்கள் தொடர்பில் இராமநாதன் அர்ச்சுனா முன்வைத்த விடயம் இன்று (19) சபையில் விவாத நிலையை ஏற்படுத்தியது.

எனினும், பாராளுமன்ற விதிமுறைகளுக்கு அமைவாக, ஆசன ஒதுக்கீடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இதன்போது, பதில் வழங்கினார். இந்தநிலையில், தமது கட்சியின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு, இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் அறிவித்தார்.

இதேவேளை, கிவுல் ஓயா திட்டம் உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கேள்வி எழுப்பினார்.
இவ்வாறான திட்டங்கள் தமிழ் மக்களின் இருப்புக்கு பாதிப்பாக அமையும் எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.