வெனிசுவேலாவுக்கு உள்ளே அல்லது வெளியே எந்தவொரு தடை செய்யப்பட்ட எண்ணெய் கப்பலும் செல்லாத வகையில் தடுக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுவெலா “பயங்கரவாதம், போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆள் கடத்தலில் ஈடுபடுவதாக” தன்னுடைய ட்ரூத் சோசியல் சமூக ஊடக பக்கத்தில் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“எனவே, தடை செய்யப்பட்ட அனைத்து எண்ணெய் கப்பல்கள் வெனிசுவெலாவிக்குள் நுழைவது மற்றும் வெளியேறுவதற்கு முழு தடை விதிக்கிறேன்” என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு வாரத்திற்கு முன்பு, வெனிசுவெலா கடற்கரை அருகே அமெரிக்கா ஒரு எண்ணெய் கப்பலை பறிமுதல் செய்தது, இது, “கடற்கொள்ளை” என வெனிசுவெலா அதிபர் நிகோலஸ் மதுரோ விவரித்துள்ளார்.
டிரம்பின் இந்த உத்தரவு, சர்வதேச அளவில் எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது
கரீபிய கடல் பகுதியில் அணுசக்தி மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் , உளவு விமானம் மற்றும் 15 ஆயிரம் துருப்புகளை அமெரிக்கா நிறுத்தியுள்ளது. அப்பகுதியில் சில படகுகளை அமெரிக்கா தாக்கியதில் 80க்கும் மேற்பட்டோர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.



