அவுஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: இலங்கை கண்டனம்

அவுஸ்திரேலியாவின் பொன்டாய் கடற்கரையில்  கடந்த 14ம் திகதி நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இலங்கையர் எவரும் பாதிக்கப்படவில்லை என வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் அதிகாரிகள் குறித்த சம்பவம் தொடர்பில் கண்காணித்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.  சிட்னியில் உள்ள பொன்டாய் கடற்கரையில் கூடியிருந்த மக்களை இலக்கு வைத்து 2 துப்பாக்கிதாரிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வன்மையாக கண்டித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ சமூக வலைதள பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ள அவர், அவுஸ்திரேலியா அரசாங்கம் மற்றும் அந்த நாட்டு மக்களுடன் இலங்கை அரசு உடன் நிற்பதாக பதிவிட்டுள்ளார்.
அதேநேரம் இலங்கை அரசும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.