அவுஸ்திரேலிய கடற்கரையில் கூடியிருந்தோரை துரத்தி துரத்தி சுட்ட துப்பாக்கிதாரிகள்: 12 பேர் பலி

அஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் ஹனுக்கா கொண்டாட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டதோடு 60 பேருக்கு மேற்ப்பட்டோர் காயமடைந்தனர்.

பயங்கரவாதிகள் அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்து தாக்கியமை அவுஸ்திரேலியாவில் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியுள்ளது

துப்பாக்கிச்சூடு நடாத்திய இரு துப்பாக்கிதாரிகள் மீதும் அவுஸ்திரேலியப் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதில் ஒருவரைக் கொன்றுள்ளனர் எனவும் மற்றையவரைக் கைது செய்துள்ளதாகவும் அதில் ஒருவர் பாகிஸ்தானில் இருந்து வந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியவர் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.