டெல்லியில் நிகழ்ந்த கார் வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
“நவம்பர் 10-ஆம் திகதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று வெடித்த சம்பவத்திற்கு, சீனா,துருக்கி,இஸ்ரேல்,பிரான்ஸ், வங்கதேசம்,அவுஸ்ரேலியா,ஈரான்,ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனம் தெரிதித்திருந்தன.
இந்த நிலையில், இது தொடர்பில் அமெரிக்கா கருத்து தெரிவிக்கையில், “நவம்பர் 10-ஆம் திகதி டெல்லியில் உள்ள செங்கோட்டை ரயில் நிலையம் அருகே கார் ஒன்று வெடித்தது. இதில் உயிரிழப்புகள் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிப்புக்கான காரணம் தற்போது வரை தெரியவில்லை என்றாலும் இந்திய அரசு பல மாநிலங்களை தீவிர எச்சரிக்கையில் வைத்துள்ளது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க குடிமக்கள் டெல்லியில் உள்ள செங்கோட்டை மற்றும் சாந்த்னி சௌக் பகுதிகளையும் கூட்டத்தையும் தவிர்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


