அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவும் அமெரிக்காவும் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை முடிவு செய்வதில் ‘நெருக்கமாக’ இருப்பதாக கூறினார்.
இந்தியாவுக்கான தனது அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் பதவியேற்பு விழாவில் அவர் திங்கள்கிழமை இவ்வாறு கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “நாங்கள் இந்தியாவுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து வருகிறோம், இது நாங்கள் முன்பு செய்ததிலிருந்து மிகவும் வித்தியாசமானது. அவர்கள் இப்போது என்னை விரும்பவில்லை, ஆனால் அவர்கள் மீண்டும் என்னை விரும்புவார்கள். நாங்கள் சரியான ஒப்பந்தம், சரியான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறுகிறோம்” என்றார்.
டிரம்ப் கூறுகையில், “நாங்கள் (அமெரிக்கா மற்றும் இந்தியா) நிறைய மோசமான வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டிருந்தோம். அவர்களிடம் (இந்தியா) நல்ல பேச்சுவார்த்தையாளர்கள் உள்ளனர். அனைவருக்கும் நன்மை கொடுக்கும் ஒரு ஒப்பந்தத்திற்கு நாங்கள் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.



