இந்தியா மீது கடந்த சனிக் கிழமை(10) பாகிஸ்தான் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்களை தொடர்ந்து அமெரிக்காவின் அனுசரணையுடன் இரு நாடுகளுக்கும் இடையில் போர் நிறுத்தம் கொண்டுவரப் பட்டபோதும் இரு நாடுகளுக்கும் இடையில் தற்போது இராஜதந்திர மோதல்கள் தொடர்வதாக தெரி விக்கப்படுகின்றது.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் உளவு பார்த்ததாக கூறி இந்தியா கடந்த செவ்வாய்க்கிழமை(13) அவர் களில் சிலரை வெளியேற தெரி வித்திருந்தது. அதனை தொடர்ந்து பாகிஸ்தானும் அங்குள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் அதி காரிகளை 24 மணிநேரத்தில் வெளி யேற்றியுள்ளது.
கடந்த 7 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணை மற்றும் வான் தாக்குதல்களை மேற்
கொண்டிருந்தது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின்வான் படை விமானங்கள் இந்தியாவின் 5 விமானங் களை சுட்டு வீழ்த்தியிருந்ததாக தெரிவித்திருந்தது. இந்தியா அதனை மறுத்த போதும் மேற்குலக ஊடகங்கள் பல அதனை ஆதாரங் களுடன் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தியாவின் தாக்குதல்களுக்கு பதிலடியாக பாகிஸ்தான் கடந்த சனிக்கிழமை(10) இந்தியா வின் படைத் தளங்கள் மீது தாக்குதல் களை மேற்கொண்டிருந்தது. இந்தியாவும் பதிலுக்கு பாகிஸ்தான் வான் படைத் தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டது. மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் அமெரிக்கா தலையிட்டு போர் நிறுத்தம் ஒன்றை அங்கு கொண்டுவந்திருந்தது.
இரு நாடுகளும் எந்த நிபந்தனைகளும் இன்றி போர் நிறுத்தத்திற்கு ஒப்புக் கொண்ட போதும், தற்போதும் இரு நாடுகளும் அரசியல் மற்றும் இராஜதந்திர ரீதியில் மோதிவருகின்றன. இந்த மோதல்கள் மீண்டும் ஒரு ஆயுத மோதலுக்கு வழி வகுக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனிடையே பாகிஸ்தானு க்கு செல்லும் நீரை இந்தியா தடுத்து வைத்திருப்பது ஒருபோர்க் குற்றம் என சீனாவின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இந்த செயற்பாடு தொடர்ந்தால் மீண்டும் மோதல்கள் ஆரம்பிக்கலாம் எனவும் கருதப்படுகின்றது. அதேசமயம், காஸ்மீர் பிரச்சினைக் கான தீர்வுக்கு தாம் அனுசரணை வழங்கத் தயார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் இந்தியா அது தொடர்பில் கருத்துக்களை தெரி விக்கவில்லை.



