நாட்டில் மீண்டும் ஒரு யுத்தம் நடைபெற இடமளிக்கப் போவதில்லை என்கிறார் ஜனாதிபதி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்றதொரு தாக்குலோ மற்றுமொரு யுத்தமோ நாட்டில் மீண்டும் ஏற்படுவதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (13 )இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ‘அண்மையில் ஸ்டிக்கர் ஒட்டியமை தொடர்பில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்’.
‘சுப்பர் முஸ்லிம் என்ற அமைப்பொன்று உருவாகிவருவதாக தகவல் கிடைத்துள்ளது’.

‘பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளை வெறுக்கின்றனர்’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.எனவே, இளைஞர்கள் அடிப்படைவாதத்துக்குள் தள்ளப்படுவதை தடுப்பதற்காகவும் அனைத்து இன மக்களையும் பாதுகாப்பதற்குமான சகல நடவடிக்கைகளையும் எடுப்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

‘அதேநேரம், காணி பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கிறோம்’.’யுத்தம் ஏற்படும் எந்த நாட்டிலும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் காணிகள் இராணுவம் கைப்பற்றும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘யுத்தம் முடிந்த பின்னர் அவ்வாறான இடங்கள் கையளிக்கப்படும்’.’மீண்டுமொரு யுத்தம் இடம்பெறும் என நாம் எதிர்பார்க்கவில்லை. அவ்வாறனதொரு யுத்தம் ஏற்படுவதற்கும் இந்த அரசாங்கம் இடமளிக்காது’.
‘எனவே, காணிகள் மற்றும் மூடியிருக்கும் வீதிகளை இந்த அரசாங்கம் மீள ஒப்படைக்கும்’ என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.