கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையே தற்போது இடம்பெற்று வருவதாக முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தமக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை ஓர் அரசியல் நாடகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘பிரித்தானிய சிறைச்சாலையில் தாம் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடிக்காத குற்றச்சாட்டை இப்போது தான் அந்த நாட்டு அரசாங்கம் கண்டுபிடித்துள்ளதா? என்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
பிரித்தானிய அரசாங்கத்தை ஒரு “மொக்கு அரசாங்கம் ” என்றும் கருணா விமர்சித்துள்ளார்.
‘அரச மரியாதையுடன் கட்டுநாயக்க விமான நிலையம் வரை என்னை பாதுகாப்புடன் கொண்டு வந்தார்கள்’.
‘அப்படிப்பட்ட பிரித்தானிய அரசாங்கத்துக்கு, இப்போது தான் கருணா பிழை விட்டுள்ளார் என்று தெரிகிறது.
‘ஆகவே, இதுவெல்லாம் கிழக்கு தமிழர்களுடைய இருப்பை சூறையாடுவதற்கான நடவடிக்கையாகும்’ என்று முன்னாள் பிரதி அமைச்சர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.



