03. இந்தியாவின் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடையே மற்றுமொரு பயணிகள் கப்பல் சேவையை முன்னெடுப்பது தொடர்பில் ஆராயப்படுகிறது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் இந்த கப்பல் சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராயப்படுவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த கப்பல் சேவை இராமேஸ்வரத்தில் இருந்து தலைமன்னார் வரையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஒரு மணிநேரத்தில் 250 பயணிகள் பயணிக்க கூடிய வகையிலான கப்பல் சேவையை இயக்குவதற்கான விருப்பம் வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக கடல்சார் சபை தெரிவித்துள்ளது.
இதற்காக இராமேஸ்வரத்தில் தற்காலிக பயணிகள் முனையம் ஒன்று நிர்மாணிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அங்கு சுங்க சோதனை சாவடியை அமைப்பதற்கும் இந்திய மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, ‘குறித்த கப்பல் சேவை இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளின் கடந்த கால பொறுமையை மீட்டெடுக்கும்’ என்று தமிழக கடல்சார் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.வள்ளலார் தெரிவித்துள்ளார். அத்துடன் ‘இந்த பயணிகள் கப்பல் சேவையின் ஊடாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



