யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

05. யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம் முன்னெடுத்திருந்த வகுப்பு புறக்கணிப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இன்று (30) காலை இடம்பெற்ற விசேட பொது கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஐங்கரன் தெரிவித்தார். ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று முன்தினம் முதல் வகுப்பு புறக்கணிப்பை ஆரம்பித்தது.

பதவி விலகிய யாழ் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதி முன்வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுதல் மற்றும் அவர் மீண்டும் பீடாதிபதியாக பதவியேற்பதற்கு உரிய சூழலை உருவாக்குதல் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த வகுப்பு புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

இந்தநிலையில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற யாழ் பல்கலைக்கழகத்தின் அவசர பேரவை கூட்டத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள கோரிக்கைகயை நிறைவேற்றுவதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டது.

இந்த பின்னணியில் இன்று இடம்பெற்ற பொது கூட்டத்தில் விரிவுரை பணிப்புறக்கணிப்பை முடிவுக்கு கொண்டு வருவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக யாழ் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஐங்கரன் தெரிவித்தார்.
அத்துடன் இன்று வழமை போன்று கற்றல் செயற்பாடுகள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.