அமைச்சு பதவிகளில் வடமாகாணம் புறக்கணிப்பு..!

தேசியமக்கள் சக்தியில் வட மகாணத்தில் இருந்து இம்முறை ஐந்து தமிழர்கள் (யாழில் 3, வன்னியில் 2) தெரிவு செய்யப் பட்டும் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கா அவர்களை கணக் கெடுக்கவில்லை என்பதே உண்மை.
23, அமைச்சுகளும்,29, பிரதி அமைச்சுக்களும் மொத்தமாக 52 பாராளுமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் 23, அமைச்சுக்களில் இரண்டு தமிழர்கள் மலையகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.(1,ஆண்,1,பெண்) 29, பிரதி அமைச்சர்களில் இரண்டு தமிழர்கள் ஒரு முஷ்லிம் அதில் திருகோணமலை மாவட் டத்தில் தெரிவான தமிழருக்கு பிரதி அமைச்சர் பதவி கிடைத்துள்ளது.
ஆனால் யாழ்மாவட்டத்தில் இருந்து தெரிவான மூவரையும், வன்னி மாவட்டத்தில் இருந்து தெரிவான இருவரையும் இந்த அமைச்சு பதவியில் கணக் கெடுக்கவில்லை என்பது உண்மை
யில் வாக்களித்த வடமாகாண மக்களுக்கு பெரும் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அரசானது இனமத மொழி சமய வேறு பாடுகள் இல்லாத சமத்துவமான அரசாங்கமாக செயல்படும் என பலர் கூறலாம். அது உண்மை யானால்  ஏன் புத்தசாசனம் ,மத  மற்றும் கலை ,கலாசார விவகாரத் துக்கு மட்டும் தனியாக அமைச்சு நியமிக்கவேண்டும்? என்ற கேள்வி எழுகிறது.