பிரான்ஸின் புதிய பிரதமராக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைக் குழு தலைவர் மிஷெல் பார்னியர் (Michel Barnier) பொறுப்பேற்க்கொண்டார்.
பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களுக்கு பின் அவர் பிரான்ஸின் புதிய பிரதமராக பொறுப்பேற்க்கொண்டார்.
“அனைத்து அரசியல் சக்திகளும் மதிக்கப்பட வேண்டும். அவர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும்,” என்று கூறிய அவர் பிரான்ஸ் ஒரு மிக முக்கியமான தருணத்தை அடைந்துவிட்டது என்றும் அதனை பணிவுடன் எதிர்கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.